புலிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம் ஜன.24ல் ஒளிபரப்பு

3 weeks ago 3

 

ஆண்டிபட்டி, டிச. 28: பொதுமக்களிடையே புலிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29 புலிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் தேசிய விலங்கான புலியின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, உள்ளூர் மக்கள் உதவியுடன் புலிகளை பாதுகாக்க வேண்டும்.

உணவு சங்கிலியில் முதன்மை வன விலங்காக உள்ள புலிகள் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலமே நிலையான வளமான வனத்தை பெற முடியும். புலிகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து இயக்குனர் சேகர் தத்தரியின் விழிப்புணர்வு குறும்படம் வரும் 28ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திரையிடப்பட இருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக இக்குறும்படம் வரும் ஜனவரி 4ம் தேதி அன்று மாலை 4.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஒளிபரப்படப்பட உள்ளது.

The post புலிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம் ஜன.24ல் ஒளிபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article