புற்றுநோய் பாதித்த தாயை வெட்டி கொன்ற மகன்

3 hours ago 2

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரைசேரி பகுதியைச் சேர்ந்தவர் சுபைதா (53). இவரது மகன் ஆஷிக் (24). பிளஸ் டூ முடித்தபின் ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் படித்த இவர் போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையானார். இந்நிலையில் சுபைதாவுக்கு சில தினங்களுக்கு முன் மூளை புற்றுநோய் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் பின்னர் அருகிலுள்ள தன்னுடைய தங்கை ஷகீலாவின் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.

இந்நிலையில் நேற்று ஷகீலா வெளியே சென்றிருந்தார். அப்போது வீட்டில் சுபைதாவும், ஆஷிக்கும் மட்டும் இருந்தனர். இந்த நேரத்தில் திடீரென சுபைதாவுக்கும், ஆஷிக்கிற்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ஆஷிக் அரிவாளால் தாய் சுபைதாவை சரமாரியாக வெட்டினார்.

சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த பக்கத்து வீட்டினர் இந்த காட்சியை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது சுபைதா கழுத்து அறுபட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். தொடர்ந்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் ஆஷிக்கை கைது செய்தனர்.

The post புற்றுநோய் பாதித்த தாயை வெட்டி கொன்ற மகன் appeared first on Dinakaran.

Read Entire Article