புறப்படட்டும் புதுப்படை வெல்லட்டும் திராவிடம்: சமூக வலைத்தளத்தில் முதல்வர் பதிவு

3 months ago 14

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: பேசிப் பேசி வளர்ந்தோம். இந்த மண்ணை வளர்த்தோம் – பண்படுத்தினோம். இந்தப் பயணத்தைத் தொடர நல்ல விதைகளைத் தேர்ந்தெடுத்துப் பயிற்றுவிக்கும் திமுக இளைஞர் அணி-தம்பி உதயநிதி ஸ்டாலின் முயற்சியில் கண்டெடுக்கப்பட்ட நாமக்கல் ம.மோகநிதி, செங்கல்பட்டு ம.சிவரஞ்சினி, தஞ்சாவூர் ஜோ.வியானி விஷ்வா ஆகியோரைத் தட்டிக்கொடுத்து வரவேற்றேன். அடையாளம் காணப்பட்டுள்ள 182 இளம் பேச்சாளர்களையும் கழகத்தினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புறப்படட்டும் புதுப்படை. வெல்லட்டும் திராவிடம். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

The post புறப்படட்டும் புதுப்படை வெல்லட்டும் திராவிடம்: சமூக வலைத்தளத்தில் முதல்வர் பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article