புரோ கபடி லீக்: பாட்னா பைரேட்ஸ் - தபாங் டெல்லி அணிகள் இன்று மோதல்

2 months ago 13

ஐதராபாத்,

11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் முதல் லீக் ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ் - தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன. அதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் யு மும்பா - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் பாட்னா பைரட்ஸ் 11-வது இடத்திலும், தபாங் டெல்லி 6-வது இடத்திலும், யு மும்பா 9-வது இடத்திலும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 5-வது இடத்திலும் உள்ளன.

Read Entire Article