
சென்னை,
தெலுங்கு சினிமாவின் முன்னனி நடிகர் அல்லு அர்ஜுன். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத்பாசில் நடிப்பில் சமீபத்தில் வெளியானது. இந்த புஷ்பா 2 படம் ரூ. 1,871 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது. இந்த படத்தின் மூலம் பான் இந்தியா அளவில் பிரபலமானார். இவர் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து, திரிவிக்ரம் சீனிவாசன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை சித்தாரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படம் புராண கதைக்களத்தில் உருவாக உள்ளதாகவும், புஷ்பா 2 படத்தை விட பிரம்மாண்ட தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் வருகிற ஜுன் அல்லது ஜூலை மாதத்தில் தொடங்க உள்ளது. விரைவில் இந்த படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.