புரட்டாசி மாதத்தால் ஆண்டிபட்டி ஆட்டு சந்தையில் விற்பனை மந்தம்: ரூ.20 லட்சத்திற்கு மட்டுமே சேல்ஸ்

1 month ago 11

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் திங்கள்கிழம் தோறும் ஆட்டுச்சந்தை நடைபெறும். இந்த ஆட்டுசந்தைக்கு ஆண்டிபட்டி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். மதுரை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் வந்து ஆடுகளை வாங்கி செல்வர். இன்று ஆட்டுச்சந்தை நடந்தது. மதுரை, உசிலம்பட்டி, தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் வெள்ளாடு, செம்மறியாடுகளை வாங்கி சென்றனர்.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘புரட்டாசி மாதம் என்பதால் இன்று நடந்த ஆட்டுச்சந்தைக்கு குறைவான ஆடுகளே விற்பனைக்கு வந்தன. எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லை. மற்ற மாதங்களில் ரூ.30 லட்சம் முதல் 40 லட்சம் வரை ஆடுகள் விற்பனையாகும். ஆனால், இந்த மாதம் இன்று நடந்த சந்தையில் ரூ.20 லட்சத்திற்கு மட்டும் ஆடுகள் விற்பனையாகின. தீபாவளி பண்டிகை நெருங்குவதால் அடுத்து நடக்கும் சந்தையில் விற்பனை களைகட்டும் என நம்புகிறோம்’ என்றனர்.

The post புரட்டாசி மாதத்தால் ஆண்டிபட்டி ஆட்டு சந்தையில் விற்பனை மந்தம்: ரூ.20 லட்சத்திற்கு மட்டுமே சேல்ஸ் appeared first on Dinakaran.

Read Entire Article