பும்ரா பந்துவீச்சை அப்படி எதிர்கொள்ள கூடாது - ஆஸ்திரேலிய அணிக்கு முன்னாள் வீரர் அட்வைஸ்

3 hours ago 3

மெல்போர்ன்,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி வரும் 26-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தொடரில் இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணிக்கு அச்சுறுத்தலை கொடுத்து வருகிறார். 3 போட்டிகள் முடிவில் இதுவரை 21 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார். இவருக்கு அடுத்து இந்தியா தரப்பில் சிராஜ் 13 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

மேலும் 3வது போட்டியிலும் இன்னிங்சை தோல்வியை தவிர்க்க போராடியாக இந்தியாவுக்கு கடைசி நேரத்தில் ஆகாஷ் தீப்புடன் சேர்ந்து 44 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த பும்ரா பாலோ ஆனிலிருந்து காப்பாற்றினார்.

இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு எதிராக ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் அதிரடியாக ரன் குவிக்க முயற்சிப்பதாக முன்னாள் வீரர் சைமன் கேட்டிச் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்குள் பும்ரா உங்களை அவுட்டாக்கி விடுவார் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே தரமான பும்ராவிடம் ஸ்ட்ரைக்கை மாற்றி ரன்கள் எடுப்பது மட்டுமே ரன் குவிக்கும் வழி என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "பும்ராவிடம் நேர்மறையாக நோக்கத்துடன் விளையாடுவதைப் பற்றிய பேச்சுகள் இருப்பது எனக்கு தெரியும். அது நல்ல விஷயம். ஆனால் பும்ராவுக்கு எதிராக விளையாடுவது பவுண்டரிகளை அடிப்பதை பற்றியது மட்டும் கிடையாது. நீங்கள் 10வது ஓவருக்கு மேல் மைதானத்திலேயே இல்லையெனில் எப்படி அவருக்கு எதிராக உங்களால் அதிரடியாக விளையாட முடியும்.

எனவே அது அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் சவாலாக இருக்கும். கடந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியர்கள் அதிரடியாக விளையாடும் நோக்கத்தில் வந்தனர். ஆனால் என்ன நடந்தது என்று பாருங்கள். நேரம் முடிவதற்குள் 80 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா சரிந்தது. சிவப்பு நிற பந்தில் நீங்கள் கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டும்.

பும்ராவின் லைன் மற்றும் லென்த் ஆகியவை காரணமாக அவருக்கு எதிராக நீங்கள் அதிரடியாக விளையாட முயற்சித்தால் அது கடினமாகும். எனவே இவை அனைத்தும் ஸ்ட்ரைக்கை மாற்றி தடுப்பாட்டுத்துடன் விளையாடுவதை பற்றியதாகும்" என்று கூறினார்.

Read Entire Article