புனே கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் - ஒருவர் கைது, 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

8 months ago 51

மும்பை,

மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள போப்தேவ் காட் பகுதியில், கடந்த 3-ந்தேதி இரவு ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த 21 வயது பெண்ணை, 3 நபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், அந்த பெண்ணின் ஆண் நண்பரை மரத்தில் கட்டி வைத்து பலமாக தாக்கியுள்ளனர்.

இது குறித்த புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய போலீசார், சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மிகவும் வெட்கக்கேடானது என்று குறிப்பிட்ட மராட்டிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், குற்றவாளிகளை தேடும் பணியில் சுமார் 700 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக போலீசார் ஒரு நபரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாகியுள்ள 2 குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். குற்றவாளிகள் தொடர்பான தகவல்களை அளிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article