புனித பீட்டர் சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள போப் ஆண்டவர் உடல்: இறுதிச்சடங்கில் பங்கேற்க வாடிகன் விரையும் உலகத் தலைவர்கள்

6 hours ago 2

வாஷிங்டன்: மறைந்த போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனர். உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் ஆண்டவர் உடல்நல குறைவால் காலமானார். அவரது உடல் வாடிகனில் அவரது விருப்பப்படி மரத்தால் ஆன சவப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போப் பிரான்சிஸின் இறுதி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வாடிகன் நிர்வாகம் தொடங்கியுள்ளது. வாடிகன் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள போப் பிரான்ஸ் உடலுக்கு கர்தினால்கள் இறுதி மரியாதை செலுத்தி வழிபாடு நடத்தினர்.

போப் ஆண்டவரின் இறுதி அஞ்சலிக்கான ஏற்பாடுகள் குறித்து கர்தினால்கள் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து வரும் சனிக்கிழமை இறுதி அஞ்சலி நடைபெறும் என வாடிகன் அறிவித்துள்ளது. போப் பிரான்சிஸின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக புனித பீட்டர் தேவாலயத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம். நாளையும், நாளை மறுத்தினமும் உள்ளூர் நேரப்படி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மறைந்த போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனர். போப் பிரான்சிஸின் உடல் புனித சாந்தா மரியா தேவாலயத்தில் சனிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இங்கிலாந்து மன்னர் சார்லஸுக்குப் பதிலாக வேல்ஸ் இளவரசர் வில்லியம் பங்கேற்கிறார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், மெக்சிகோ அதிபர் கிளடியா செயின்பாம் பங்கேற்கவில்லை. தமிழ்நாடு அரசு சார்பாக பங்கேற்பார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post புனித பீட்டர் சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள போப் ஆண்டவர் உடல்: இறுதிச்சடங்கில் பங்கேற்க வாடிகன் விரையும் உலகத் தலைவர்கள் appeared first on Dinakaran.

Read Entire Article