புனித சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றம்

17 hours ago 2

 

விருதுநகர், நவ.23: விருதுநகர் பாண்டியன் நகர் கத்தோலிக்க புனித சவேரியார் ஆலய 25ம் ஆண்டு வெள்ளி விழா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மாலை திருச்சி புனித பிரான்சிஸ் தி சேல்ஸ் சபை பேட்ரிக் ஜெயராஜ், பாண்டியன் நகர் பங்குத்தந்தை லாரன்ஸ், உதவி பங்குத்தந்தை மரிய ஜான் பிராங்கிளின், பள்ளி முதல்வர் ஆரோக்கியம் ஆகியோர் புனித பிரான்சிஸ் சவேரியார் திருஉருவம் பொறித்த கொடியை ஏற்றி வைத்து திருவிழாவை தொடங்கி வைத்தனர். அதன்பின் நவநாள் திருப்பலி, மறையுரை நடைபெற்றது.

திருவிழாவிற்காக ஆலயம் வண்ண தோரணங்கள், விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தினசரி மாலை நவநாள் திருப்பலி, மறையுரை நடைபெறுகிறது. 9ம் நாள் நவ.30 மாலை மதுரை மாவட்ட முன்னாள் பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் திருவிழா கூட்டுத்திருப்பலி, அதை தொடர்ந்து மிக்கேல் அதிதூதர், புனித லூர்து அன்னை, புனித பிரான்சிஸ் சவேரியார் திரு உருவம் வண்ணமலர்கள், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்பவனி நடைபெற உள்ளது. மறுநாள் மாலை கொடியிறக்கம் செய்து திருவிழா நிறைவடையும். இதற்கான ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.

 

The post புனித சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article