புனல்குளம் அரசு உயர்நிலை பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டும் பணி

4 weeks ago 6

 

கந்தர்வகோட்டை,டிச.21: கந்தர்வகோட்டை அருகே புனல்குளம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட எம்எல்ஏ சின்னத்துரை அடிக்கல் நாட்டினார். கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி புனல்குளம் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் புதிய இரண்டு வகுப்பறைகள் கட்டுவதற்கான பணிகளை கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னதுரை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழய்யா, ஊராட்சி மன்ற தலைவர் ரேனுகா தேவி உதயகுமார், ஒன்றிய துணை செயலாளர் முத்துக்குமார், சண்முகம், மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post புனல்குளம் அரசு உயர்நிலை பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டும் பணி appeared first on Dinakaran.

Read Entire Article