புத்தாண்டையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள், எம்பிக்கள் சந்தித்து வாழ்த்து

4 months ago 10

சென்னை: புத்தாண்டையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள், எம்பிக்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். ஆங்கில புத்தாண்டையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று காலை முகாம் அலுவலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, எஸ்.ஜெகத்ரட்சகன், கனிமொழி, கலாநிதி வீராசாமி, து.மு.கதிர்ஆனந்த், தே.மலையரசன், அருண்நேரு ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதேபோன்று தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் ரெ.தங்கம் மற்றும் நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

The post புத்தாண்டையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள், எம்பிக்கள் சந்தித்து வாழ்த்து appeared first on Dinakaran.

Read Entire Article