அன்னையர் தினம் ஜி.கே.வாசன் வாழ்த்து

4 hours ago 1

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அன்னையர் தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
அனைவரும் அன்னையர் தினத்தை புனித நாளாக எண்ணி, அன்னையை பாராட்ட வேண்டும், போற்ற வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் தாய் மூலமாக இவ்வுலகில் முதல் அடி எடுத்து வைக்கிறது. இந்த உலகிற்கு நம்மை அடையாளம் காட்டிய பெற்ற தாய் தான் அனைவருக்கும் முழு முதற்கடவுள். குழந்தையாகப் பிறந்து, வளர்ந்து, சமுதாயத்தில் ஏதேனும் ஒரு துறையில் பணிபுரிந்து, குடும்பத்தை, மாநிலத்தை, நாட்டை முன்னேற்ற குறிப்பாக நாட்டு மக்களையும், நாட்டையும் பாதுகாக்க முப்படைகளில் ஏதேனும் ஒன்றில் சேர்ந்து உயிரையும் பணயம் வைத்து பணியாற்ற அடிப்படை காரணமாக விளங்கும் தாயை ஒவ்வொருவரும் நினைத்து பெருமைப்பட வேண்டும். தாயுள்ளத்தோடு அனைவரையும் மதித்து வாழ வேண்டும். அன்னையைப் போல அன்பாக, நேர்மையாக, வெளிப்படைத்தன்மையோடு, நல்லவராக வாழ்ந்து அன்னைக்கு புகழ் சேர்ப்போம்.

The post அன்னையர் தினம் ஜி.கே.வாசன் வாழ்த்து appeared first on Dinakaran.

Read Entire Article