நன்றி குங்குமம் தோழி
புத்தாண்டில் மகிழ்ச்சியாக இருக்க இப்பழக்கங்களை எப்போதும் ஃபாேலா பண்ணுங்க. மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் கிடைக்கும்.அன்றாட வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க சில எளிமையான மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டாலே ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உத்தரவாதம் கிடைக்கும். ஆனால், நம்மை எப்படி மகிழ்ச்சியாக வைத்திருப்பது என தெரியாமல் தேவையற்ற கவலைகள் மற்றும் ஸ்ட்ரெஸ் முதலியவற்றில் சிக்கிக் கொள்கிறோம்.
திட்டமிட்டு வாழ்ந்தால் வாழ்வில் வருகின்ற துன்பங்கள் மற்றும் சவால்களை விரட்டியடித்து நாம் இன்பமாக வாழலாம். அதற்கு பயனுள்ள டிப்ஸ்கள் இதோ…
தினசரி உடற்பயிற்சி: உடற்பயிற்சி செய்வதால் நம் உடல் மட்டுமல்லாமல் மனமும் புத்துணர்ச்சி அடையும். உடற்பயிற்சி செய்யும்போது மகிழ்ச்சிக்கான எண்டார்ஃபின்ஸ் ஹார்மோன்கள் நம் உடலில் சுரக்கும். தேவையற்ற பதற்றம், கவலைகள் நீங்கி மனம் அமைதியடையும்.
சூரிய ஒளி படட்டும்: உங்கள் வீட்டில் சூரிய ஒளி படாமல் இருக்கும்போது உடலிலுள்ள செரோடோனின் (மகிழ்ச்சியான ஹார்மோன்) அளவு குறையும். இதன் விளைவாக நீங்கள் சோகமாகவும், மனச்சோர்விலும் இருக்கும் உடல். இதனால் சூரிய ஒளி வீட்டிலுள் படும் போது நேர்மறையான ஆற்றலைக் கொடுத்து குடும்பத்தினருக்கு மகிழ்வையும், உடல் ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.
புகைப்படங்கள்: உங்களுக்கு எத்தனை கவலையாக இருந்தாலும் கவலையை போக்க சில பொருட்கள், புகைப்படங்கள் நம் கண்களில் படும்படி வைக்கவும். இதன் மூலம் வீட்டில் நேர்மறையான நினைவுகள் வந்து கவலைகள் நீங்கி மகிழ்ச்சி அடையும்.
வீட்டை ஒழுங்கமைத்தல்: வீட்டை ஒழுங்கமைக்காமல் இருக்கும் போது பார்த்தாலே சிலருக்கு கோபம் வரும். ஆகவே முதலில் வீட்டை ஒழுங்கமைத்தும், தேவையற்ற எல்லாவற்றையும் அகற்றி, பயனுள்ளவற்றை பாதுகாப்பாக வைத்தும் இருந்தால் மன அழுத்தத்தைக் குறைத்து மனம் தெளிவாக இருக்கும். வீட்டினுள் சுவர்களுக்கு வண்ணங்களை தேர்ந்தெடுத்து பிரகாசமாகவும், தூய்மையாகவும் இருந்தால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.
செடிகள்: வீட்டில் உள்ளே வளர்க்கும் செடிகள் வீட்டிற்கு அழகு தருவது மட்டுமல்ல மன ஆரோக்கியத்திற்கும், மன அழுத்தத்தையும் குறைக்கிறது. உட்புறத் தாவரங்கள் வீட்டிற்குள் பார்க்கும் போதும், வெளியில் பார்க்கும் போதும் மகிழ்ச்சியை அளிக்கும்.
தியானம்: தியானம் செய்வது, சுற்றத்தாருடன் பழகுதல், நண்பர்கள், அலுவலக ஊழியர்கள், மத்தியில் நல்லதொரு பந்தத்தை ஏற்படுத்தி, அன்பு செலுத்தியும், உடலுக்கு போதுமான அளவு தூக்கம், ஆரோக்கியமான உணவும் மிக அவசியமானது. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், தேவைப்படுகின்ற அனைத்து விஷயங்களையும் பூர்த்தி செய்தால் வாழ்க்கையில் மன நிம்மதியும், மன மகிழ்ச்சியும் ஏற்படும்.
தொகுப்பு: எஸ்.மாரிமுத்து, சென்னை.
The post புத்தாண்டு ரெசலூஷன் appeared first on Dinakaran.