
சென்னை,
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, சென்னை மேற்கு மாவட்டம் அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதிக்கான 'கலைஞர் நூலகத்தை' திமுக இளைஞர் அணி சார்பில் இன்று திறந்து வைத்தோம்.
அமைந்தகரை சந்தை பகுதியில் அமைந்துள்ள இந்நூலகத்தை அண்ணாநகர் தொகுதியைச் சேர்ந்த பள்ளி - கல்லூரி மாணவர்கள், கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
புத்தகங்களின் வழியே உலகைப் படிக்க கலைஞர் நூலகம் நோக்கி திரண்டு வாரீர். என தெரிவித்துள்ளார் .