திருப்பூர், ஜன.26: திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிடம், இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர்குமார் மற்றும் நிர்வாகிகள், பாரதிய ஜனதா கட்சி திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் மற்றும் நிர்வாகிகள் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: திருப்பூர் புத்தக திருவிழாவில் தினமும் கருத்தரங்கு நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில் மக்களுக்கு தவறான கருத்துக்களை விதைக்கும் வகையிலும், வரலாற்று உண்மைகளை மறைத்து, திரித்து, பரப்புரையாக பயன்படுத்தும் களமாக சிலர் பேசி வருகிறார்கள்.
பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் தவறான சிந்தனைகளை ஊட்டும் விதமாக மாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் கரு.பழனியப்பன் காந்தி குறித்து பேசிய கருத்தால் கலவரம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனை தட்டிக்கேட்டவர்களை தாக்கவும் செய்துள்ளனர். எனவே தேவையற்ற கருத்தரங்குகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனா்.
The post புத்தக கண்காட்சியில் தேவையற்ற கருத்தரங்கிற்கு அனுமதி வழங்கக்கூடாது appeared first on Dinakaran.