
புதுடெல்லி,
திபெத்திய புத்த மத துறவியான தலாய் லாமாவின் 90-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள மத தலைவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் அவருக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தலாய் லாமாவுக்கு பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், தலாய் லாமாவின் 90-வது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் 140 கோடி இந்தியர்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன். அன்பு, இரக்கம், பொறுமை மற்றும் நல்லொழுக்கம் ஆகியவற்றின் நீடித்த அடையாளம் அவர் என பதிவிட்டு உள்ளார்.
அவருடைய செய்தி, மதிப்பை தூண்டியுள்ளது. அனைத்து மதத்தினர் இடையேயும் பாராட்டையும் பெற்றுள்ளது. அவருடைய நீடித்த உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்டகால வாழ்க்கைக்காக நாங்கள் வேண்டி கொள்கிறோம் என்று பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.