விளாத்திகுளம் : புதூரில் நடந்த மாட்டுவண்டி போட்டியில் சிங்கிலிப்பட்டி, வைப்பார் காளைகள் முதலிடம் பிடித்தன.வீரபாண்டிய கட்டபொம்மனின் 266வது பிறந்த நாளை முன்னிட்டு புதூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞரணி, புதூர் வட்டார ரேக்ளா மாட்டுவண்டி சங்கம் சார்பில் 9ம் ஆண்டு மாட்டுவண்டி போட்டிகள் நேற்று நடந்தது.
6 மைல் தொலைவு கொண்ட சின்ன மாட்டுவண்டி போட்டியில் 24 வண்டிகள் கலந்து கொண்டன. போட்டியை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
இதில் வைப்பாறு மணிகலா மாட்டுவண்டி முதலிடம் பிடித்து ரூ.25 ஆயிரத்தையும், முத்துக்குமார் மாட்டுவண்டி 2வது இடம் பிடித்து ரூ.20 ஆயிரத்தையும், கல்லூரணி கிரில்டல் கிருஷ்ணா மாட்டுவண்டி 3வது இடம் பிடித்து ரூ.15 ஆயிரத்தையும் பெற்றன.
தொடர்ந்து நடந்த 5 மைல் தூரம் கொண்ட பூஞ்சிட்டு மாட்டுவண்டி போட்டியில் 38 வண்டிகள் பங்கேற்றதால் 2 பிரிவுகளாக நடத்தப்பட்டன. போட்டியை விளாத்திகுளம் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தொடங்கி வைத்தார்.
போட்டியில் சிங்கிலிப்பட்டி சங்கு சித்தர், எஸ்.எஸ்.சிவா மாட்டுவண்டிகள் முதலிடம் பிடித்து ரூ.20 ஆயிரத்தையும், 2வது இடம் பிடித்த லெக்கம்பட்டி முத்துராமலிங்கம், தர்மலிங்கம் மாட்டுவண்டிகளுக்கு ரூ.15 ஆயிரம், 3வது இடம்பிடித்த சிங்கிலிப்பட்டி ஆனந்த், சுப்பையா மாட்டுவண்டிகளுக்கு ரூ.10 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டன.இப்போட்டியை காண சாலையின் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் குவிந்திருந்தனர்.
The post புதூரில் மாட்டுவண்டி போட்டி சிங்கிலிப்பட்டி, வைப்பாறு காளைகள் முதலிடம் appeared first on Dinakaran.