லண்டன்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பிடிஐ கட்சி தலைவருமான இம்ரான்கான், பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடந்த 2023ம் ஆண்டு முதல் சிறையில் உள்ளார். இந்நிலையில் தங்கள் தந்தை இம்ரான்கானுக்கு ஆபத்து இருப்பதாகவும், அவரை காப்பாற்றுங்கள் என்று அவரது மகன்கள், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். லண்டனில் வசிக்கும், இம்ரானின் மகன்கள் சுலைமான் கான், காசிம் ஆகியோர் ஒரு நேர்காணலில் பேசும்போது, ‘எங்கள் தந்தை ஒரு மரண அறையில் இருக்கிறார்,
வெளிச்சம் இல்லை, வழக்கறிஞர் இல்லை, மருத்துவர் இல்லை, இருப்பினும் அவர் உடைந்து போகவில்லை. அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ஆராய்ந்தால், அவை அரசியல் நோக்கம் கொண்டவை என்பது தெளிவாகும். ஜனநாயகத்தையும் பேச்சு சுதந்திரத்தையும் ஆதரிக்கும் எந்தவொரு அரசாங்கமும் எங்கள் தந்தையை விடுவிக்க ஆதரிக்கும். குறிப்பாக உலகின் மிகவும் பிரபலமான தலைவரான டிரம்ப்பின் உதவியை நாடுவோம்’ என்றனர்.
The post சிறையில் இருக்கும் எங்கள் தந்தை இம்ரான்கானை காப்பாற்றுங்கள்: டிரம்ப்பிடம் மகன்கள் கோரிக்கை appeared first on Dinakaran.