புதுவை: திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா தொடங்கியது

1 day ago 3

புதுவை மாநிலம் அரியாங்குப்பம் மணவெளியில் பிரசித்தி பெற்ற பஞ்சபாண்டவர் சமேத திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த அவ்வகையில் இந்த ஆண்டுக்கான தீமிதி திருவிழா மே 2-ந்தேதி நடக்கிறது.

இதையொட்டி நேற்று முன்தினம் திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சங்கராபரணி ஆற்றங்கரையில் இருந்து கரகம் எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தன. தொடர்ந்து இரவு 10 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள கொடிக் கம்பத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

விழா நாட்களில் தினசரி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு வீதி உலாவும் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 30-ந்தேதி மாலை 5 மணிக்கு திருக்கல்யாணமும், மே 2-ந்தேதி தீமிதி உற்சவமும் நடைபெறும். மறுநாள் மஞ்சள் நீராட்டு மற்றும் இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது.

Read Entire Article