தண்டையார்பேட்டை: சென்னை துறைமுகத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர், தண்டையார்பேட்டை துறைமுகம் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் கல்லூரியில் படித்து வருகிறார். இவர்களது பக்கத்து வீட்டில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சென்னை துறைமுகம் மற்றும் கப்பல்கூட தொழிலாளர் விடுதலை முன்னணி பொதுச்செயலாளர் நன்மாறன் (63) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் கல்லூரி மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற நன்மாறன், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மாணவி கூச்சலிட்டதால் ஓட்டம் பிடித்துள்ளார்.
இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் மாணவியின் தாய் புகார் அளித்தார். கல்லூரி மாணவிக்கு நன்மாறன் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து நன்மாறன் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் ஆகிய 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post புதுவண்ணாரப்பேட்டையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: விசிக தொழிற்சங்க நிர்வாகி கைது appeared first on Dinakaran.