புதுச்சேரியில் ஆட்டோ டிரைவர்கள் இன்று வேலைநிறுத்தம்

3 months ago 30

புதுச்சேரி,

புதுவையில் மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு விடுவதற்கு ஆட்டோ டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இ-பைக் திட்டங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும், கட்டிட தொழிலாளர்களுக்கு வழங்குவதுபோல் தீபாவளி உதவித்தொகையாக ரூ.4 ஆயிரம் வழங்கவேண்டும், ஆட்டோக்களுக்கு விதிக்கப்படும் ஆன்லைன், ஸ்பாட் பைன் அபராத முறையை கைவிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை மாநில அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களின் கூட்டு போராட்டக்குழு சார்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) வேலை நிறுத்தம் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இன்று புதுவையில் ஆட்டோக்கள் ஓடாது. மேலும் பஸ் நிலைய பகுதியில் இருந்து சட்டசபை நோக்கி கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ டிரைவர்கள் ஊர்வலமும் நடத்துகின்றனர்.

Read Entire Article