புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சி தலைவர்

1 day ago 2

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் தொடர் கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இன்றைய தினம் 10வது நாள் கூட்டம் தொடங்கியது. முதலாவதாக சட்டசபை உறுப்பினர்களின் கேள்ளி நேரம் தொடங்கியது . அப்போது குறிக்கிட்டு பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா, புதுச்சேரியின் தலைமை பொறியாளர் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அவையை ஒத்திவைத்து இது சம்பந்தமாக விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதே கோரிக்கையை காங்கிரஸ் உறுப்பினர்களும் திமுக உறுப்பினர்களும் முன்வைத்தனர். அப்போது கேள்வி தொடர் முடிந்த பின்னர் இது குறித்து விவாதிக்கலாம் என சபாநாயகர் அறிவுறுத்தினார். இருந்த போதிலும் அவையில் கூச்சல் எழுப்பி சபாநாயகர் முன்பு தொடர்ச்சியாக இதனை வழியுறுத்தி வந்தனர். அதற்கு சபாநாயகர் எதிர்க்கட்சி சட்டமன்ற தலைவர் செல்வத்தை உடனடியாக குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்ற உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து அவைக் காவலர்கள் எதிர்க்கட்சி சட்டமன்ற தலைவரை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். இதனை கண்டித்து திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இருந்த போதிலும் சட்டப்பேரவை கூட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

Read Entire Article