புதுசா ஒண்ணும் யோசிக்கல… பீகார் வாக்காளர்கள்தான் மகிழ்ச்சி அடைவார்கள்: ப.சிதம்பரம் கருத்து

1 week ago 3

புதுடெல்லி: பட்ஜெட் குறித்து முன்னாள் ஒன்றிய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்தார். பட்ஜெட் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கூறியதாவது: பாஜ தலைமையிலான ஒன்றிய அரசின் புதிய அறிவிப்புகள், வரி செலுத்தும் 3.2 கோடி நடுத்தர மக்களுக்கும், 7.65 கோடி பீகார் வாக்காளர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கலாம். பட்ஜெட்டில் 4.9 சதவீதமாக இருந்த நிதிப் பற்றாக்குறை திருத்திய பட்ஜெட் மதிப்பீட்டில் 4.8 சதவீதமானதில் மகிழ்ச்சிப்படும்படி எதுவும் இல்லை. இதற்காக நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரிய விலை கொடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளதாக நாங்கள் சொன்னபோது நம்பாதவர்கள், இப்போது அதனை உணர்வார்கள் என நம்புகிறேன். ஒன்றிய பாஜ அரசுக்கு புதிய சிந்தனைகள் எதுவும் இல்லை. நாங்கள் 1991 மற்றும் 2004ல் மேற்கொண்டது போல் எதுவும் செய்யவில்லை. இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

The post புதுசா ஒண்ணும் யோசிக்கல… பீகார் வாக்காளர்கள்தான் மகிழ்ச்சி அடைவார்கள்: ப.சிதம்பரம் கருத்து appeared first on Dinakaran.

Read Entire Article