புதுக்கோட்டை, ஏப்.9: ஆசிரியர்களின் நலன் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி விடைத்தாள் மதிப்பீட்டு மையத்தில் கருப்புப் பட்டை அணிந்து பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் நூதனப் முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் பணியிரண்டாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டு பணி நடைபெற்று வருகிறது.
அதில், ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டியும், ஆசிரியர்-மாணவர் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிடவும், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக வாயில் கூட்டம் நடத்தினர். அதன்பிறகு, அனைத்து ஆசிரியர்களும் கருப்பு பட்டை அணிந்து விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் முனைவர் சாலைசெந்தில் தலைமை வகித்தார். இந்நிகழ்வில், நிர்வாகிகள் தில்லையப்பன், சங்கர் நாகராஜன் உள்ளிட்ட ஏராளமான ஆசிரியர், ஆசிரியைகள் பங்கேற்றனர்.
The post புதுக்கோட்டையில் பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் போராட்டம் appeared first on Dinakaran.