புதுக்கோட்டையில் நவம்பர் புரட்சி தின கொடியேற்று விழா

6 months ago 18

புதுக்கோட்டை,நவ.8: நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களின் சார்பில் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. 1917 நவம்பர் 7ம்நாள் அன்று லெனின் தலைமையில் ஏற்பட்ட ரஷ்யப் புரட்சியை ஆண்டுதோறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் கொண்டாடி வருகிறது. அதனொரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று 200-க்கும் மேற்பட்ட இடங்களில் செங்கொடி ஏந்தியும்,

இனிப்பு வழங்கியும், புரட்சி முழக்கங்கள் எழுப்பியும் நவம்பர் புரட்சிதினம் கொண்டாடப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற கொடியேற்று விழாவிற்கு கட்சியின் புதுக்கோட்டை மாநகரச் செயலாளர் புதுகை பாண்டின் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கவிவர்மன் கொடியேற்றி வைத்து உரையாற்றினார். இந்நிகழ்வில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சங்கர், நாகராஜன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post புதுக்கோட்டையில் நவம்பர் புரட்சி தின கொடியேற்று விழா appeared first on Dinakaran.

Read Entire Article