புதுக்கோட்டையில் சமூக ஆர்வலர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

3 hours ago 2

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் சமூக ஆர்வலர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 3ம் தேதி வரை நீதிமன்றம் காவலில் வைக்க உத்தரவு அளித்துள்ளது.

சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். சட்டவிரோத கல்குவாரிக்கு எதிராக போராடிய ஜகபர் அலி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கில் குவாரி உரிமையாளர் ராசு, அவரது மகன் சதீஷ், முருகானந்தம், காசி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

கனிம வள கொள்ளைக்கு எதிராக போராடி வந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் இறந்த விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில், நடந்தது விபத்து அல்ல என்றும் கல் குவாரி சம்பந்தப்பட்ட நபர்கள் ஜகபர் அலியை திட்டமிட்டு கொலை செய்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா வெங்களூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகபர் அலி. திருமயம் பகுதிகளில் நடக்கும் கனிமவள கொள்ளைகளை ஆதாரங்களுடன் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து புகார் மனு அளித்துவந்தார். இதனால் ஜெகபர் அலிக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில், கடந்த ஜனவரி 10-ஆம் தேதி புதுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கனிமவள கொள்ளை தொடர்பாக புகார் மனு அளித்தார்.இதன் காரணமாக கனிம வள கொள்ளையர்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வந்தார்.

எனினும், தொடர்ந்து இதுபோன்று மனுக்களை கொடுத்து வந்துள்ளார். பெயருக்கு ஒரு அரசு அனுமதியை வாங்கிக் கொண்டு ஒதுக்கப்பட்ட அளவை விட பல மடங்கு கனிமங்கள் வெட்டி அள்ளப்பட்டு, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி வருவது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஜகபர் அலி, பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற டிப்பர் லாரி மோதியதில் ஜெகபர் அலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, ஜேசிபி மற்றும் லாரி உரிமையாளர் முருகானந்தம் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விபத்து வழக்கை, கொலை வழக்காக மாற்றிய திருமயம் போலீசார் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். வழக்கை விசாரித்த நீதிபதி 4 பேரையும் பிப் 3ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு அளித்துள்ளது.

The post புதுக்கோட்டையில் சமூக ஆர்வலர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் appeared first on Dinakaran.

Read Entire Article