புதுக்கோட்டை,பிப்.1: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் குழந்தைகள் அறிவியல் மாநாடு 32வது ஆண்டாக புதுக்கோட்டை மாவட்டம் சிவபுரத்தில் அமைந்துள்ள ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கற்பக விநாயகா கல்வி அறக்கட்டளை, அறங்காவலர் முனைவர் கவிதா சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க, மாவட்டச் செயலாளர் வீரமுத்து வரவேற்றார். ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் பரசுராமன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொதுக்குழ உறுப்பினர் மணவாளன் ஆய்வுகள் குறித்து கருத்துரை வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் ரமேஷ் மண்டல மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டினார். மண்டல மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்ட சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைபபள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி-வேதியன்குடி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி – மீனம்பட்டி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி – அண்ணாமலையார் குடியிருப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி -மேல்மங்கலம் .பிரதாபிராமன்பட்டினம், ஒடப்பவிடுதி, அசோக்நகர், அரசு மேல்நலைப்பள்ளி சூரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஏம்பல் ஆகிய பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. நிறைவாக குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் அருள் சுந்தரம் நன்றி கூறினார்.
The post புதுக்கோட்டையில் குழந்தைகள் அறிவியல் மாநாடு appeared first on Dinakaran.