தமிழக வெற்றிக் கழகத்தை விஜய் தொடங்கி ஒருவருடம் கடந்துவிட்ட நிலையில், அந்தக் கட்சிக்கு போதுமான வரவேற்பு இல்லை என்கின்றன விஜய்க்கு எதிரான கட்சிகள். ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், தனது அடுத்த கட்ட நகர்வு குறித்து பிரசாந்த் கிஷோரை கூட்டிவைத்து ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார் விஜய்.
பொதுவாக புதிதாக தொடங்கப்படும் கட்சிகளில் மாற்றுக் கட்சி நிர்வாகிகள், பிரபலங்கள், நடிகர்கள் தாமாக வந்து இணைவது வழக்கம். விஜயகாந்த் கட்சி தொடங்கியபோது அப்படி பலர் இணைந்தனர். கமல் கட்சி தொடங்கியபோதும்கூட பல முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், நடிகர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் அவரது மக்கள் நீதி மய்யத்தில் கலந்தனர்.