புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி: முதன்மைக்கல்வி அலுவலர் ஆய்வு

5 hours ago 4

புதுக்கோட்டை, மே 14: புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணிகளை முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் ஆய்வு ெசய்தார்.

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 2- ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளித் திறக்கப்படும் நாளன்றே மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் பாடப்புத்தக குடோனில் இருந்து 21 வழித்தடங்களிலும், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 17 வழித்தடங்களிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு 6- ம் வகுப்பு முதல் 12- ம் வகுப்பு வரையிலான தமிழக அரசின் விலையில்லா பாடப்புத்தகங்களை வாகனங்களில் பிரித்து அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணியினை, புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலர் சண்முகம் பார்வையிட்டு பாடப்புத்தகங்களை பள்ளிகளுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கவும், பள்ளிகளில் பாடப்புத்தகங்களை பாதுகாப்பாக வைத்திருந்து, அரசு அறிவிக்கும் நாளன்று மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்கவும் அறிவுரைகள் வழங்கினார்.

The post புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி: முதன்மைக்கல்வி அலுவலர் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article