நீலகிரி: எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பொய்களை மட்டுமே கூறி வருகிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். நீலகிரி மலைப்பகுதி மேம்பாட்டுத் திறந்தவெளி மைதானத்தில் நடை பயிற்சி மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது; 2019 மக்களவை தேர்தலின்போதே பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என உறுதி அளித்தேன்.
பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை கிடைத்ததற்கு தாமே காரணம் என சிலர் கூறுகின்றனர். பொய், பித்தலாட்டத்தை சொல்வதுதான் எடப்பாடி பழனிசாமியின் வேலையாக இருக்கிறது. அமித்ஷாவை எதற்காக எடப்பாடி பழனிசாமி சந்தித்தார் என்பது நாட்டுக்கே தெரியும். ஆனால், தான் சொல்லித்தான் மெட்ரோ, 100 நாள் வேலை ஆகிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டதாக கூறி வருகிறார்.
இந்த மாதிரி Humbug-ஆ பொய், பித்தலாட்டத்தை சொல்வதுதான் அவரின் வேலையாக இருக்கிறது. இதுவும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும். அதிமுக ஆட்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் யார்? என்று கேட்டால் தெரியாது, ஆனால் இப்போது யார்? என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். தற்போது வெளிநாட்டு வீரர்கள் இங்கே வந்து கலந்துகொள்ளும் அளவுக்கு விளையாட்டு கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் உரிய தண்டனை வழங்கப்படும். என்று கூறியுள்ளார்.
The post பொய், பித்தலாட்டத்தை சொல்வதுதான் எடப்பாடி பழனிசாமியின் வேலையாக இருக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.