அறந்தாங்கி: காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி றனர். இதற்கு இந்தியா, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி – பட்டுக்கோட்டை சாலையில் உள்ள ராஜேந்திரபுரம் பஸ் ஸ்டாப், இதற்கு அடுத்த பஸ் ஸ்டாப்பான எருக்கலகோட்டை பஸ் ஸ்டாப், சாலையில் என மொத்தம் 3 இடங்களில் பாகிஸ்தான் கொடியை பேப்பரில் கலரில் பிரிண்ட் எடுத்து ஒட்டப்பட்டு இருந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. தகவல் அறிந்து அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஒட்டப்பட்டிருந்த பாகிஸ்தான் கொடியை அப்புறப்படுத்தினர். பாகிஸ்தான் கொடியை ஒட்டி சென்ற மர்ம நபர்கள் யார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post புதுக்கோட்டை அருகே சாலையில் ஒட்டப்பட்ட பாகிஸ்தான் கொடி: மர்ம நபர்களுக்கு வலை appeared first on Dinakaran.