புதுக்கோட்டை, ஜன.18: புதுக்கோட்டை அருகே கிணற்றுக்குள் விழுந்த மயிலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் பொக்கி சாரன் பட்டி வயல் அருகே உள்ள கிணற்றில் தேசியப் பறவையான ஆண் மயில் நூறு அடிக்கு மேல் தண்ணீர் இல்லாத கிணற்றில் பறக்கும் போது தவறி விழுந்து மேலே வர முடியாமல் கிணற்றுக்குள்ளே பறந்து கொண்டு இருந்தது.
அப்போது அந்தப் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் மூன்று பேர் கயிறு கூடை ஆகியவற்றைக் கொண்டு அந்த மயிலை மேலே தூக்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்கள் மயில் பறந்து பறந்து உள்ளே சென்று கொண்டிருந்தது. அதனால் பிடிக்க முடியவில்லை. இது குறித்து புதுக்கோட்டை தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீர்ரகள் மயிலை மீட்டு வெளியே பறக்கவிட்டனர்.
The post புதுக்கோட்டை அருகே கிணற்றுக்குள் விழுந்த மயிலை தீயணைப்பு துறையினர் மீட்டனர் appeared first on Dinakaran.