மதுரை, திருச்சி டைடல் பூங்கா பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி

2 hours ago 3

சென்னை: மதுரை, திருச்சி டைடல் பூங்கா பணிகளுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி அளித்தது. திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சப்பூரில் டைடல் பார்க் அமைக்கப்பட உள்ளது. பஞ்சப்பூரில் 14.16 ஏக்கரில் ரூ.315 கோடியில் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் டைடல் பூங்கா அமைய உள்ளது. மதுரையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே 9.97 ஏக்கரில் ரூ.289 கோடியில் டைடல் பார்க் கட்ட திட்டம். ரூ.289 கோடி செலவில் கட்டப்படும் டைடல் பார்க்கில் 5,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்

தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகமும் தமிழ்நாடு மின்னணு கழகமும் இணைந்து தமிழ்நாடு டைடல் பார்க் லிமிடெட் என்ற கூட்டு நிறுவனத்தை செயல்படுத்தி வருகின்றன. இந்த நிறுவனம் சார்பாக சென்னை, கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் டைடல் பார்க் அமைக்கப்பட்டுள்ளது. ஐடி வேலைவாய்ப்புகளை பெருக்கும் வகையில் டைடல் பூங்காக்களை அரசு அமைத்து வருகிறது.

இத்தகைய டைடல் பூங்காக்களில் ஐடி துறை சார்ந்த நிறுவனங்கள் தங்கள் அலுவலகத்தை நிறுவுவது மிக எளிமையாக இருக்கிறது. இதனால் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. எனவே சென்னை ,கோவை போல திருச்சி மாவட்டத்தில் டைடல் பார்க் அமைக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. திருச்சி- மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு அருகில் இந்த டைடல் பார்க் அமைக்கப்பட உள்ளது. 14.16 ஏக்கர் நிலப்பரப்பில் 93 ஆயிரம் சதுரடியில் சுமார் 415 கோடி ரூபாய் செலவில் இந்த டைடல் பூங்கா கட்டப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இந்த டைடல் பார்க்கில் 740 கார் நிறுத்துமிடம் மற்றும் 1500 இருசக்கர வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட இருக்கிறது. இந்த டைடல் பார்க் மூலம் 5000க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்த டைடர் பார்க் தரைதளத்துடன் கூடிய 6 தளங்களுடன் அமைக்கப்பட உள்ளது.

இரண்டு கட்டங்களாக கட்டுமான பணிகள் நடைபெற உள்ளன. முதல் கட்ட கட்டுமான பணிக்கு ஏற்கனவே டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனவரி மாத இறுதிக்குள்ளேயே கட்டுமான பணிகள் தொடங்கிவிடும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். கட்டுமான பணிகள் சுமார் 18 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

 

 

The post மதுரை, திருச்சி டைடல் பூங்கா பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி appeared first on Dinakaran.

Read Entire Article