புதுக்கடை அருகே ஆட்டோ டிரைவர் தற்கொலை

1 month ago 8

புதுக்கடை, மார்ச் 26: புதுக்கடை அருகே தேங்காப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் குமார் (48). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி லதா (44). குமாருக்கு மது பழக்கம் உண்டு. குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்வது வழக்கம். இதனால் கோபமடைந்த மனைவி லதா கடந்த 15 நாட்களுக்கு முன்பு தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மன வேதனையடைந்த குமார் சம்பவ தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் காணப்பட்டார். மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சிகிட்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிட்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post புதுக்கடை அருகே ஆட்டோ டிரைவர் தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article