
மும்பை,
2006-ம் ஆண்டு 'மிஸ் யுனிவர்ஸ் இலங்கை' பட்டத்தை வென்ற நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ். அதன் பின்னர் 2009-ம் ஆண்டு வெளியான 'அலாடின்' என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். பின்னர் அவர் "மர்டர் 2, ஹவுஸ்புல் 2, ரேஸ் 2 மற்றும் கிக்" போன்ற வெற்றிகரமான படங்களில் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து தற்போது, 'வெல்கம் டூ தி ஜங்கிள்', 'ஹவுஸ்புல்-5' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
இதற்கிடையில் பண மோசடி வழக்கில் சிக்கிய சுகேஷ் சந்திரசேகரின் லாட்டரி மோசடி வழக்கை மையப்படுத்தி ஒரு வெப் தொடர் தயாராக இருக்கிறது. இதில் நடிக்க ஜாக்குலின் பெர்னாண்டசை படக்குழுவினர் அணுகியிருக்கிறார்கள். கதையை கேட்ட நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், 'யோசித்து நல்ல முடிவு சொல்கிறேன்' என்று கூறியுள்ளாராம். விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.