விரைவில் 'கிங்டம்' பட பாடல்.. அனிருத் கொடுத்த அப்டேட்

4 hours ago 2

ஐதராபாத்,

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா தற்போது தனது 12-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு 'கிங்டம்' எனப்பெயரிடப்பட்டுள்ளது. கவுதம் தின்னனுரி இயக்கியுள்ள இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட், பார்ச்சூன் போர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ், சத்யதேவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படம் அடுத்த மாதம் 30-ம் தேதி வெளியாக உள்ளநிலையில், முதல் பாடல் குறித்த அப்டேட்டை அனிருத் பகிர்ந்துள்ளார். அதன்படி, விரைவில் கிங்டம் பட பாடல் என தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

#Kingdom Coming

— Anirudh Ravichander (@anirudhofficial) April 28, 2025
Read Entire Article