மாருதி சுசூகி நிறுவனம், தனது ஈக்கோ எம்பிவி வாகனத்தை புதிய அம்சங்களுடன் மேம்படுத்தியுள்ளது. இதில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 80 எச்பி பவரை வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. புதிய விதிகளின்படி 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்தும் வகையில் இன்ஜின் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர 70 எச்பி பவரை வெளிப்படுத்தும் சிஎன்ஜி வேரியண்டும் உள்ளது.
இந்த மேம்படுத்தப்பட்ட மாடலில் 7 சீட்டுக்கு பதிலாக 6 சீட்டுகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. இரண்டாவது வரிசையில் கேப்டன் சீட்டுகள் உள்ளன. 5 சீட் வேரியண்டில் எந்த மாற்றமும் இல்லை. பாதுகாப்பு அம்சமாக 6 ஏர் பேக்குகள், புதிய சீட் கவர்கள், லக்கேஜ் நகராமல் இருக்கும் வகையில் லட்கேஜ் ரிட்டன்ஷன் உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. விலை விவரம் அறிவிக்கப்படவில்லை.
The post புதிய மாருதி ஈக்கோ எம்பிவி appeared first on Dinakaran.