புதிய போப்புக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

8 hours ago 1

சென்னை,

உலகம் முழுவதும் உள்ள 140 கோடி கத்தோலிக்கர்களின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த மாதம் 21-ந் தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதையடுத்து புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான கார்டினல் கான்கிளேவ் எனப்படும் கர்தினால் மாநாடு நடைபெற்றது.

இதில், அமெரிக்காவை சேர்ந்த கார்டினல் ராபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் கத்தோலிக்கர்களின் 267-வது போப் ஆண்டவராக தேர்வு செய்யப்பட்டார். அவர் போப் 14-ம் லியோ என அழைக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. புதிய போப்புக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், 267-வது போப் ஆண்டவராக தேர்வு செய்யப்பட்ட 14-ம் லியோவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "ரோமன் கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்த தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய போப் 14-ம் லியோவுக்கு வாழ்த்துகள். அமைதி மற்றும் ஒற்றுமை பற்றிய அவரின் செய்தி உலகம் முழுவதும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Read Entire Article