திண்டிவனம்: சட்டமன்ற தேர்தலில் புதிய கூட்டணிக்கு பாமக செல்லுமா? என்ற கேள்விக்கு ராமதாஸ் பதிலளித்து உள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறுகையில், ‘அதிகரித்து வரும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை தடுப்பதற்கு அரசு நிரந்தர தடை பெற வேண்டும். மும்மொழி கொள்கை ஒரு மோசடி கொள்கை.
இரு மொழி கொள்கை ஏமாற்று கொள்கை. ஒரு மொழி கொள்கையே உன்னதமான கொள்கை’ என்றார். தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை தேர்தலில் புதிய கூட்டணி அமைக்கப்படுமா? என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த ராமதாஸ், ‘தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது. கூட்டணி குறித்து தற்போது எந்த கருத்தும் இல்லை. மாற்றம் இருந்தால் பொதுக்குழு கூடி முடிவு எடுக்கும்’ என்று கூறினார்.
The post புதிய கூட்டணியில் பாமகவா? ராமதாஸ் பதில் appeared first on Dinakaran.