
சென்னை,
சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்து காணப்படுவதால், தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.67 ஆயிரத்தை கடந்தது.
இந்த நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி, சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.68,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,510-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டு இருக்கிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.114-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.