சென்னை மெட்ரோ ரெயில் 2ம் கட்ட திட்டம்: டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

23 hours ago 2

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம் 2-ல் வழித்தடம் 3 (மாதவரம் பால்பண்னை முதல் சிறுசேரி சிப்காட் மெட்ரோ வரை). வழித்தடம் 4 (கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை) மற்றும் வழித்தடம் 5 மாதவரம் பால்பண்ணை முதல் சோழிங்கநல்லூர் வரை) ஆகிய முன்று வழித்தடங்கள் மற்றும் மாதவரம் பூந்தமல்லி மற்றும் செம்மஞ்சேரியில் உள்ள பராமரிப்பு பணிமனைகள் உட்பட 1,189 கி.மீ நீளத்திற்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஏற்பு கடிதம் (Letter of Acceptance) டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு ரூ. 5,870 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பு கடிதத்தை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக், டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விகாஸ் குமாரிடம் இன்று (02.04.2005) வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரெரயில் நிறுவனத்தின் நிதி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குநர் அபித் குமார் ஜெயின் (இயக்கம் மற்றும் சேவைகள்), சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

ஒப்பந்தத்தின் கீழ் உள்ள பணியின் நோக்கம் இரண்டாம் கட்டத்தில் உள்ள 3 வழித்தடங்கள் மூன்று பராமரிப்பு பணிமனைகள் மற்றும் பயணிகளுக்கு சேவைகளை வழங்குதல் உட்பட இயக்கம் மற்றும் பராமரிப்பு தொடர்பான அனைத்து பணிகளும் இதில் அடங்கும்.

இதற்கான ஒப்பந்த காலம். இரண்டாம் கட்டத்தில் பயணிகளின் சேவை தொடங்கும் தேதியிலிருந்து பன்னிரண்டு ஆண்டுகள் வரை செயல்பாட்டில் இருக்கும். டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பணிகள் திருப்திகரமாக இருப்பின் மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிக்கப்படலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article