புதிய உச்சத்தில் தங்கம் விலை: ஒரு பவுன் ரூ.70 ஆயிரத்தை நெருங்குகிறது

1 week ago 4

சென்னை,

தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 3-ந்தேதி வரை தாறுமாறாக உயர்ந்து வந்த நிலையில், அன்றைய தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 560-க்கும், ஒரு பவுன் ரூ.68 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னரும் விலை அதிகரிக்கும் என்ற அச்சத்தை கொடுத்த நிலை மாறி, மறுநாளில் இருந்து தங்கம் விலை மளமளவென சரியத் தொடங்கியது. அதன்படி, கடந்த 4-ந்தேதியில் இருந்து 8-ந்தேதி வரையிலான 5 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.335-ம், பவுனுக்கு ரூ.2 ஆயிரத்து 680-ம் அதிரடியாக குறைந்து சற்று நிம்மதியை அளித்தது. ஆனால் அது நீடிக்கவில்லை.

நேற்று முன்தினம் மீண்டும் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் ஏறுமுகத்தை நோக்கி சென்றது. அன்றைய நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.185-ம், பவுனுக்கு ரூ.1,480-ம் உயர்ந்து இருந்தது.அதன் தொடர்ச்சியாக நேற்று கிராமுக்கு ரூ.150-ம், பவுனுக்கு ரூ.1,200-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 560-க்கும், ஒரு பவுன் ரூ.68 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.185-ம், பவுனுக்கு ரூ1,480- உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.69,960- ஆக உள்ளது. தங்கம் விலையில் இது புதிய உச்சம் ஆகும். ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8,745 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.4,160 உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Read Entire Article