கந்தர்வகோட்டை, ஜன.30: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு அகத்திக்கீரை காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு கந்தர்வகோட்டை கடைவீதியில் குவிந்த பொது மக்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கந்தர்வகோட்டை சுற்றுவட்டார கிராம பகுதி பொதுமக்கள் தங்களது தேவையான காய்கறி, கீரை, மளிகை உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு கந்தர்வகோட்டை கடைவீதிக்கு வருவது வழக்கம்,
இந்த நிலையில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் தருவதற்காக அகத்திக்கீரை, காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட வகைகள் வாங்க அதிக அளவிலான பொதுமக்கள் கடைவீதியில் கூடியதால் தஞ்சை, புதுகை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, மேலும் கந்தர்வகோட்டை பகுதி கோயில் குளக்கரைகளில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பண திதி கொடுத்து வழிபாடு செய்தனர்.
The post புதிதாக திறக்கப்பட உள்ள முதல்வர் மருந்தகங்கள் ஆய்வு கந்தர்வகோட்டையில் தை அமாவாசை: அகத்திகீரை வாங்குவதற்கு கடைவீதியில் குவிந்த பொதுமக்கள் appeared first on Dinakaran.