“புதிதாக கட்சி தொடங்குபவர்கள்கூட திமுக அழிய வேண்டும் என நினைக்கின்றனர்” - முதல்வர் ஸ்டாலின்

4 months ago 17

சென்னை: “திமுக வளர்வது சிலருக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான், புதிதுபுதிதாக கட்சித் தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும், ஒழிய வேண்டும், என்று கூறுகின்றனர். அண்ணா கூறுவதுபோல் ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், வாழ்க வசவாளர்கள்! தேவையில்லாமல் எல்லோருக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. தேவையும் இல்லை. எங்களுடைய நேரத்தை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை.” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை, கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் இன்று (நவ.4) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அனிதா அகாடமி மூலம் பயின்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கலைஞர் இலவச கண் மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்றவர்களுக்கு மூக்கு கண்ணாடிகளை வழங்கினார்.

Read Entire Article