புடினுடன் டிரம்ப் பேச்சு

3 months ago 6

வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் புடினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசினார். இந்த பேச்சுவார்த்தை ஒன்றரை மணி நேரம் பேச்சுவார்த்தை நீடித்தது. இதுதொடர்பாக அதிபர் டிரம்ப் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘உக்ரைன் விவகாரம், மத்திய கிழக்கு நாடுகள், எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு, டாலரின் சக்தி என பல்வேறு விவகாரங்கள் குறித்து ரஷ்ய அதிபர் புடினுடன் ஆலோசித்தேன். உக்ரைனுடனான போரால் பல லட்சக்கணக்கான உயிர்கள் பலியாவதை நிறுத்த வேண்டும் என்பதை இருவரும் ஒப்புக்கொண்டுள்ளோம். இருவரும் ஒருங்கிணைந்து செயல்பட ஒப்பு கொண்டுள்ளோம். அமெரிக்காவுக்கு புடினும், ரஷ்யாவுக்கு நானும் செல்ல ஒப்புக்கொண்டுள்ளோம் என பதிவிட்டுள்ளார். இதையடுத்து, ரஷ்யா- உக்ரைன் போர் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

The post புடினுடன் டிரம்ப் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article