கோபால்பட்டி, பிப். 12: சாணார்பட்டி அருகே மடூர் ஊராட்சி புகையிலைப்பட்டியில் அமைந்துள்ளது புனித சந்தியாகப்பர், புதின செபஸ்தியார் கோயில். இங்கு ஆண்டுதோறும் நடக்கும் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கோயில் திருவிழா வரும் பிப்.17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
தொடர்ந்து 3 நாட்கள் மின்ரத பவனி, பொங்கல் விழா நடைபெறவுள்ள நிலையில் முக்கிய நிகழ்ச்சியான ஜல்லிக்கட்டு போட்டி பிப்.19ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வாடிவாசல் அமைக்கும் பணி நேற்று பூமி பூஜையுடன் துவங்கியது. வாடிவாசல் அமைத்தல், தடுப்புகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான ஏற்பாடுகளை ஊர் நாட்டாமை சூசைமாணிக்கம் தலைமையில் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.
The post புகையிலைப்பட்டியில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம் appeared first on Dinakaran.