திருப்பூர், ஜன.21: திருப்பூர் நல்லூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவல் அடிப்படையில் போலீசார் செட்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு அரசால் தடை செய்யப்பட்ட 1200 கிராம் புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து அங்கிருந்தவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த முகமது சுல்தான் (23) என்பதும், அவர் கடைகளுக்கு சில்லரை விற்பனை செய்ய புகையிலைப் பொருட்களை வைத்திருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது சுல்தானை கைது செய்தனர். மேலும், அவர் விற்பனைக்காக வைத்திருந்த 1,200 கிராம் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
The post புகையிலைப் பொருட்களை பதுக்கிய பீகார் மாநில வாலிபர் கைது appeared first on Dinakaran.