புகையிலை பொருட்கள் விற்ற வாலிபர் கைது

3 weeks ago 4

 

திருப்பூர், ஜன.10: திருப்பூர் புதுக்காடு பகுதியில் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தெற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் புதுக்காடு அண்ணாநகரை சேர்ந்த சிபிராஜ் (22) என்பதும், அவர் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிபிராஜை கைது செய்து 130 கிராம் புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

The post புகையிலை பொருட்கள் விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article