வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த நபர் கைது

2 hours ago 1

சென்னை: சென்னையை சேர்ந்த பத்மநாபன் என்பவரிடம் கடந்த 2023ம் வருடம் சென்னையை சேர்ந்த சாய்புதின் ஆ/வ.51, த/பெ.ஃபரூக் என்பவர் போலந்து நாட்டில் Meat Cutter வேலை வாங்கி தருவதாகவும், சம்பளம் ரூ. 1 லட்சம் என ஆசை வார்த்தைகள் கூறி முன் பணமாக ரூ.1,25,000/- பணம் பெற்றுக்கொண்டு போலந்து நாட்டிற்கு வேலைக்கான விசா வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றியதாக கொடுத்த புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு, வேலை வாய்ப்பு மோசடி தடுப்புப்பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

புலன் விசாரணையில் எதிரி சாய்புதின் என்பவர் 2023ம் ஆண்டு செயல்பாட்டில் இல்லாத Saif International என்ற கன்சல்டன்சி பெயரில் Protector of Emigrants-ல் மத்திய அரசின் உரிமம் பெறாமல் போர்ச்சுகல். இத்தாலி, கேமேன் தீவு, போலந்து மற்றும் ஜெர்மன் ஆகிய நாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 193 நபர்களிடம் பணம் ரூ.2 கோடிக்கு மேல் வங்கி கணக்கு மூலமாகவும் நேரடியாகவும் பெற்று, வேலை வாங்கி தராமல் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவினர், இவ்வழக்கின் எதிரி சாய்புதின், வ/51, த/பெ.ஃபரூக், என்பவரை 30.01.2025-ம் தேதி கைது செய்து அவரிடமிருந்து Dell laptop – 01, I phone 13 Pro Max-01, Pen drive – 01, Work Permit, Contract Agreement மற்றும் போலியான நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்த பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் செய்து உத்தரவுப்படி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நடவடிக்கை மேற்கொண்ட வேலை வாய்ப்பு மோசடி பிரிவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர்ஆ.அருண், வெளிநாட்டு வேலைக்காக மத்திய அரசின் கீழ் இயங்கும் Protector of Emigrants அலுவலகத்தில் முகவராக செயல்பட உரிமம் பெறாமல் இயங்கி வரும் ஏஜெண்ட்டுகளை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும், போலியான நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டிற்கு செல்ல முயற்சிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் வெளிநாட்டு வேலைக்காக மத்திய அரசின் Emigrants சான்றிதழ் இன்றி முகவராக செயல்பட்டாலோ மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தாலோ அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த நபர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article